தொழில்நுட்பம் என்றால் என்ன? | ஆல் டெக் டிப்ஸ் அறிமுகம்

what is technology | All Tech Tips

தொழில்நுட்பம் என்றால் என்ன?

தொழில் + நுட்பம் = தொழில்நுட்பம். தொழில் செய்திடும்பொழுது பயன்படுத்தப்படும் நுட்பம்.  அதென்ன நுட்பம்? நுட்பம் என்பது நுணுக்கமாகச் செய்வது என்ற பொருள்படும். ஒவ்வொரு விடயங்களிலும் நுட்பம் உண்டு. தொழில் சார்ந்து பயன்படுத்தும் நுட்பங்களை  "தொழில்நுட்பம்" என்கிறோம்.

என்ன தொழில்?


தற்பொழுது எண்ணற்ற தொழில்கள் வந்துவிட்டன. தொழில் என்பதில் பொருட்கள், மற்றும் சேவைகள் போன்றவற்றின் உள்ளடக்கம் உண்டு. எந்த ஒரு செய்கையின்போதும் நாம் அதில் சில நுணுக்கங்களை பயன்படுத்தி இலாவகமாக அதை செய்து முடிக்க உதவுவதுதான் நுட்பம்.

இன்றைய காலத்தில்,தொழில்நுட்பம் என்றாலே அறிவியல் தொடர்பானவை என்பது போல ஆகிவிட்டது. அந்தளவிற்கு இணையம், கணினி, அறிவியல் குறித்த தகவல்கள், கண்டுபிடிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கணினி தொழில்நுட்பம், மொபைல் போன் தொழில்நுட்பம், இணைய தொழில்நுட்பம் என்பதை குறிப்பிடலாம். அது மட்டுமில்லாது கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத்தொழில்நுட்பம் என துறைகள் சார்ந்து பிரித்து தொழில்நுட்பங்கள் கையாளப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் கணினி, மொபைல் மற்றும் இன்டர்நெட் தொடர்புடைய "தொழில்நுட்பச் செய்திகளை நாம் வழங்கவிருக்கிறோம் என்பதை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..!

குறிப்பாக அடிப்படை விடயங்களை கற்றுத் தேறாத புதிய பயனர்களுக்கு அதிகம் கற்றுத் தேர்ந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக அழகான தமிழ் நடையில் கட்டுரைகள் தாங்கி வரவிருக்கிறது.

தொழில்நுட்பம் என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்ள விக்கிபீடியா-தொழில்நுட்பம் - என்ற இந்த இணைப்பில் சுட்டி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கணினித் தொழில்நுட்பம்


கணினி என்றழைக்கப்படும் Computer குறித்த அடிப்படைத் தகவல்கள், அதில் பயன்படும் மென்பொருட்கள், கணினியை மிக விரைவாக பயன்படுத்துவது குறித்தான அறிவுறுத்தல்கள், கணினி பழுதுகளை சரிபார்த்தல் போன்றவை குறித்து இந்த பகுதியில் அலசப்படும்.

மொபைல் தொழில்நுடபம்


அலைபேசி என அழைக்கப்படும் மொபைல் தொழில்நுட்பத்தில், தற்காலத்தில் தொலைத்தொடர்பு மற்றும் பொழுது போக்கிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் Smartphone - திறன் பேசி குறித்த தகவல்கள் இடம்பெறும். அதில் பயன்படுத்தப்படும் App என்றழைக்கப்படும் செயலிகள், மொபைல் போனை எப்படி பராமரிப்பது? எப்படி பயன்படுத்துவது, புதியதாக வெளிவரும் திறன் பேசிகளின் சிறப்புகள் மற்றும் விலை குறித்த விபரங்கள், இரு வேறுபட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான வித்தியாசங்கள் மற்றும் பயன்முறைகள் குறித்த விபரங்கள் இங்கு அலசப்படும்.

இன்டர்நெட் தொழில்நுட்பம்

அன்றாடம் தகவல் தொடர்பு மற்றும் தகவல் திரட்டுகளுக்கு மிக உதவிகரமாக இருக்கும் இணையத்தைப் பற்றி அலசும் பகுதி இது. இதில் இணையம் எப்படி உருவானது, அது எப்படி செயல்படுகிறது? எந்த வகையில் பயன்படுத்தினால் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

மேலும் இணையம் ஆரம்ப காலம் முதல் தற்காலம் வரை எப்படி முன்னேறி வந்திருக்கிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். இணையத்தில் ஏற்படும் அன்றாட வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்து அதிகம் இந்த பகுதியில் இடம்பெறும்.

what is technology


சினிமா மற்றும் அரசியல்:


தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வரும் சினிமா மற்றும் அரசியல் குறித்த பதிவுகள் அவ்வப்பொழுது இடம்பெறும். "ரஜினி என்ன செய்கிறார்?" அரசியல் கட்சி எப்பொழுது தொடங்க போகிறார்? விஜய் முதல்வர் நாற்காலிக்கு தகுதியானவர்தானா?

தமிழக அரசியல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சீர்கெட்ட அரசியல் சீர்படுமா? எதிர்காலத்தில் காமராஜர் போல அப்பழுக்கற்ற ஒரு தலைவர் உருவாக வாய்ப்புகள் உள்ளதா? என்பது போன்ற பல சுவாரஷ்யமான அரசியல் கட்டுரைகளைத் தாங்கி வரவிருக்கிறது.

தமிழ் நடிகைகள் வெறும் காட்சிப் பொருட்கள் தானா? கதாபாத்திரங்களுக்காக நடிகைகள் உருவாக்கப்படுவார்களா? அந்த நடிகை எந்த நடிகருடன் தொடர்பு வைத்துள்ளார்? உண்மையில் அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா போன்ற சுவராஷ்யமான சினிமா ரகசிய தகவல்கள் கூட இடம்பெறும் வகையில் இருக்கும்.


மேலும் தொழில் தொடர்பான தகவல்கள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள், பொழுதுபோக்கு, சினிமா குறித்த தகவல்களையும் இடையிடையே வழங்க விருக்கிறோம்.

நிச்சயமாக இந்த AllTECHTIPS இணையத்தளம் பயனர்களுக்கு ஒரு பொக்கிஷமாக அமையும். அதே சமயம் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பயன்மிக்க தகவல்கள் அனைத்தையும் தரும் என்பதை இதன் மூலம் உறுதி செய்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியவைகள். 


இந்த இணையத்தளத்தில் மின்னஞ்சல் மூலம் சந்தாதாராக இணைவதன் மூலம் இலவசமாக இந்த இணையதளத்தில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளும் உங்கள் மின்னஞ்சல் தேடி வந்துவிடும்.

இணையதளத்தில் வெளிவரும் கட்டுரைகள், துணுக்குகள், புளுகு மூட்டைகள், உண்மை சம்பவங்கள் , தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உண்டெனில் தாராளமாக எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதற்காக பிரத்யேமாக உள்ள கான்டாக்ட் பக்கத்தை பயன்படுத்தலாம். அல்லது எங்களது மின்னஞ்சலுக்கு உங்களது கருத்துகளை எழுதலாம். மேலும், இவ்விணையதளத்தில் நீங்களும் ஒரு ஆசிரியராக இணைந்து பணியாற்றலாம்.

உங்களுக்கு உள்ள தொழில்நுட்ப மற்றும் பொழுது போக்கு குறித்த அறிவுகளை கட்டுரைகளாக வரைந்து தள்ளலாம். அதற்கென இவ்விணையதளம் கட்டுரையின் தரத்தைப் பொருத்து தக்க சன்மானத்தைக் கொடுக்கும்.

மேலும் தொழில்நுட்பம் இணையதளத்தில் என்னென்ன விடயங்களை சேர்க்கலாம். என்னென்ன தவிர்க்கலாம் என்பதையும் நீங்கள் இங்கு சுட்டிக் காட்டித் தெரிவிக்கலாம்.

Thanks To All | All Tech Tips

Post a Comment

0 Comments