கம்ப்யூட்டரை சுத்தம் செய்வது எப்படி?

 

clean pc at your home

வருட கணக்காக பயன்படுத்தும் கம்ப்யூட்டரை ஒரு சிலர், சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பார். இதனால் கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உடனடியாக கம்ப்யூட்டர் சரி செய்பவரை அழைத்து, அவரிடம் காட்டினால், அவர் கம்ப்யூட்டர் சிபியு cabin ஐ கழற்றி, அதில் எந்த பகுதியில் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்த்து சோதனையிட்டு, ஏதேனும் பிரச்சனை எனில் அந்தப் பகுதியை பிரித்து எடுத்து அதை சரி செய்து மீண்டும் , பொருத்தி விடுவார்.

பிறகு சிபியூ பெட்டியில் உள்ள தூசிகளை அகற்றுவதற்கு ஒரு சிறிய பல் துலக்கும் பிரஸ் கொண்டு அதை சுத்தம் செய்துவிடுவார்.

அதன் பிறகு, அவர் கையுடன் கொண்டு வைத்திருக்கும் காற்று உலையை பயன்படுத்தி, கம்ப்யூட்டர் கேபிள் அடைந்திருக்கும் தூசி துகள்களை அகற்றி மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடுவார்.

பிறகு, மற்ற பகுதிகளை சுத்தம் செய்து, குறிப்பிட்ட தொகையை சரி செய்ததற்கான பில் தொகையாக போட்டு நம்மிடம் வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.

அவர் தொழில் பக்தி உடையவர் என்றால், உண்மையாகவே என்ன செலவு கூலியோ அதைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவார்.

ஒரு சிலர் அப்படி இல்லாமல், கம்ப்யூட்டர் பயனருக்கு என்ன தெரியப் போகிறது என்று, அவரது விருப்பம் போல் அதிகமான தொகையைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவார்.

சரி கம்ப்யூட்டரை நாமாக வீட்டில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

  • பதிவில் முன்னர் குறிப்பிட்டபடியே, கம்ப்யூட்டர் சிபியூ பெட்டியை நாமாகவே நான்கு புறமும் உள்ள ஸ்க்ரூக்களை திரியை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு, அந்த மூடியை திறந்து உள்ளே இருக்கும் பெரும்பாலான தூசிகளை ஒரு மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுத்திடலாம்
  • அதன் பிறகு நம் வீட்டில் இருக்கும் மென்மையான பல்துலக்கும் பழைய பிரஸ் கொண்டு மதர்போர்ட்டில் இருக்கும் தூசி துகள்களை மெதுவாக அழுத்தி தேய்ப்பதன் மூலம் எடுத்து விடலாம்.
  • முடிந்தால், மதர்போர்ட்டில் பொருத்தப்பட்டுள்ள ரேம் எனப்படும் ரேண்டம் மெமரி கார்டை எடுத்து தனியாக வைத்து அதை சுத்தப்படுத்திடலாம்.
  • அதில் ஒரு புறம் முனையில் உள்ள செம்பு போன்ற முனைகளை, நம் வீட்டில் குழந்தைகள் வைத்திருக்கும் பென்சில் ரப்பரைக் கொண்டு மெதுவாக தேய்த்து எடுப்பது மூலம் அதில் உள்ள அழுக்குகளை அகற்றிடலாம்.
  • மேலும் ஹார்ட் டிஸ்க் எனப்படுகின்ற வன்பொருளை மெதுவாக கழற்றி அதில் உள்ள தூசி துகள்களை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுத்திடலாம்.
  • கம்ப்யூட்டர் பட்டியில் உள்ள சிக்கலான பகுதிகளை துடைத்திட மெல்லிய பிரஸ் மற்றும் துணிகளை கொண்டு லேசாக துடைத்து எடுக்கலாம்.
  • இறுதியாக கம்ப்யூட்டரில் உள்ள ரெண்டு இடுக்குகள் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத மெல்லிய தூசிகளை அகற்ற, , வீட்டிலேயே நாம் பயன்படுத்தும் ஹேர் டிரையர் அல்லது ஏதேனும் ஒரு ஏர் பிரஸ்ஸிங் டூல் கொண்டு அந்த தூசி துகள்களை காற்றின் மூலம் அடித்து வெளியேற்றிவிடலாம்.

இவ்வாறு தூசிகளை அனைத்தும் ஆற்றிய பிறகு, கழட்டி வைத்த ரேம் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை உரிய இடங்களில் சரியாக பொருத்தி, அதற்கான வயர்களில் அதில் சரி மீண்டும் கம்ப்யூட்டர் பெட்டியை மூடி, அதற்கு மின் இணைப்பு கொடுத்து கம்ப்யூட்டரை துவங்கிடலாம்.

இவ்வாறு செய்து கொள்ளும் பொழுது மிக கவனமாக செய்து, சுத்தம் செய்வதற்கு முன்பாகவே மின்சாரத்தை. துண்டித்து விட்டு அதன் பிறகு தான் மூடியை கழற்ற வேண்டும்

, இந்த முறையில் கம்ப்யூட்டரை சுத்தம் செய்து மீண்டும் இயக்கினால் நிச்சயமாக முன்பிருந்ததை விட மிக வேகமாக கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டருக்கு அதை எடுத்துச் சென்றாலும் அங்கு உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் மேனும் அதைத்தான் செய்வார். இதனால் நமக்கு குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் ரூபாய் மீதமாகும்..

. இதை செய்ய சிறிது பொறுமை தேவை. . பொறுமையுடன் அந்த வேலையை செய்து முடிக்கும் பொழுது நம்முடைய கம்ப்யூட்டரை நாமே சுத்தம் செய்திருக்கலாம் தேவையில்லாமல் வரும் செலவுகளை குறைத்து விடலாம்.

இவ்வாறு மாதம் ஒன்றுக்கு ஒரு முறையாவது கம்ப்யூட்டரை நமக்கு நாமே சுத்தம் செய்திடும் பொழுது, பணம் மீதியாவதோடு கம்ப்யூட்டரின் பகுதி பொருட்கள் கெடுவதை தவிர்த்திடலாம்.

கம்ப்யூட்டரில் உள்ள மதர்போர்டு, ப்ராசசர், ரேம் எனப்படும் ரேண்டம் மெமரி, ஹார்ட் டிஸ்க் எனக்கு எனப்படும் வந்துட்டு, மேலும் கம்ப்யூட்டரை வெப்பம் அதிகமா ஆகாமல் காத்திடும் உலர் பேன்கள், கம்ப்யூட்டர் பகுதி பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கக்கூடிய எஸ் எம் பி எஸ் எனப்படும் பெட்டி போன்ற அனைத்துமே தூசி துகள்களால் ஏற்படும் பிரச்சனை, அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்சினை , போன்றவற்றிலிருந்து அவற்றை காத்து உங்களுடைய கம்ப்யூட்டரை அதிவிரைவாக ரிப்பேர் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து இவ்வாறு சுத்தப்படுத்திடும் பொழுது உங்கள் கம்ப்யூட்டர் புதிய கம்ப்யூட்டரை போல இயங்கத் தொடங்கிடும்.

அந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும், சமூக இணையதளங்களான whatsapp, twitter, facebook, மற்றும் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், 

Post a Comment

0 Comments