இன்டர்நெட் என்றால் என்ன?


what is internet in tamil

இன்டர்நெட் என்றால் என்ன?

என்னய்யா இது.. இது கூட எங்களுக்குத் தெரியாதா? இப்படி ஒரு தலைப்பு.. இதுக்கு ஒரு பதிவு என்று இன்டர்நெட் பற்றி தெரிந்தவர்கள் நினைக்கலாம். ஆனால் அது பற்றி பலருக்கும் புரிதல் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

இணையத்தை அணுக பயன்படுவதுதான் INTERNET என்பது உங்களது பதிலாக இருக்கலாம். அது பொதுவான ஒரு பதில் தான். ஆனால் அடிப்படையில் இணையம் என்பது என்ன? அது எப்படி செயல்படுகிறது? எப்படி அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது? அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றைகளை இங்கு சுவராஷ்யம் கலந்து கொடுக்கவிருக்கின்றேன்.

எனவே தெரிந்தவர்கள் கூட ஒரு முறை வாசித்துப் பார்த்தால், நிறைய புதிய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இன்டர்நெட் தோற்றம்:


 1960 களின் துவக்கத்திலேயே இன்டர்நெட் தொடர்பான அடிப்படை விடயம் ஏற்படுத்தப்பட்டது.  தற்காலத்தில் உள்ளதுபோல Pocket Switching - பாக்கெட் நிலைமாற்றல் அப்பொழுது இல்லை. இணையத்தை அணுகுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. அப்பொழுது Circuit Switching - சுற்று நிலைமாற்றல் முறைதான் இருந்தது. இதனால் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

அதென்னா பாக்கெட் நிலைமாற்றல், சுற்று நிலைமாற்றல் என்ற சந்தேகம் பிறக்கிறதா? இதோ அதற்கான விளக்கம்.

சுற்று நிலைமாற்றல் (Circuit Switching)


அக்காலத்தில் பழைய அனலாக் தொலைபேசியில் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நேரடியாக டயல் செய்து பேச முடியாது. முதலில் தொலைபேசி நிலைத்திற்கு டயல் செய்து இந்த எண்ணுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற தகவலை தர வேண்டும். பிறகு அங்கிருந்து குறித்த நபருக்கு உங்கள் அலைபேசி இணைப்பு இணைக்கப்படும்.

இது எப்படி என்றால் ஒரு நேரடியான நீண்ட  நூலில் கட்டப்பட்ட இரு தீப்பெட்டிகளுடன் பேசுவது போன்றது. பேசுமுனை நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும். மறுமுனை நாம் தொடர்புகொள்பவருக்கு கேட்கும் முனை கொடுக்கப்பட்டிருக்கும். இடைப்பட்ட நேரத்தில் மற்ற யாரும் தொடர்புகொள்ள முடியாது. பேசி முடிக்கும் வரை அந்த தொடர்பை தொலைபேசியகத்தில் இணைத்து வைத்திருப்பர்.

ஒருவேளை நாம் பேச விருக்கும் நபர் மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருந்தால், அவர் பேசி முடிக்கும் வரை (1மணி நேரம் ஆனாலும் கூட) நாம் காத்திருக்க வேண்டும். அவர் தொடர்பிற்கு கிடைத்ததும் நமக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு தான் நாம் பேச முடியும். அப்படி பட்ட நேரத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஒரே நேரத்தில் ஒருவருடன் மட்டுமே பேச முடியும்.

பாக்கெட் நிலைமாற்றல்: (Packet Switching)


தற்பொழுது இந்த முறையில் தான் இணைய இணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு செயல்படுகிறது. இது ஒரு டிஜிட்டல் நிலைமாற்றல் தொழில்நுட்பம். இதில் ஒரே நேரத்தில் பலர் பேசுவதற்கு, இணையத்தை அணுகுவதற்கு பயன்படும் நுட்பம். ஒரு சுற்றில் செல்லும் தகவல்களை சிறு சிறு துண்டுகளாக (Pocket) களாக மாற்றி அவற்றை குழுவாக மாற்றி அனுப்பும் முறை. இந்த பாக்கெட்டுகள் உரிய சரியாக முகவரிக்கு சென்றுவிடும். இதனால் ஒரே நேரத்தில் பலர் இதை பயன்படுத்திட முடியும். உதாரணமாக நம் வீட்டிற்கு முன்பு உள்ள தபால் பெட்டியை கூறலாம்.

வீட்டில் எத்தனை பேர் வசித்தாலும், குறிப்பிட்ட நபரின் பெயர், விலாசத்தை தபால் கவரில் எழுதி போட்டால், ஒரு பெட்டியில் எத்தனை கடிதங்கள் இருந்தாலும், எவ்வித குழப்பமுமின்றி குறிப்பிட்ட பெயருடைய நபர் மட்டும் அவருடைய கடிதங்களை எடுத்துக்கொள்வதை போல இது.

அதுபோன்றுதான் டிஜிட்டல் பாக்கெட் நிலை மாற்றல் செயல்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு இணைப்பை  எத்தனை நபர்கள் பயன்படுத்தினாலும், பாக்கெட்டில் இருக்கும் முகவரியை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட நபருக்கு சரியாக சென்றடைந்துவிடும். இன்றைய இணைய தொழில்நுட்பம் இவ்வாறுதான் செயல்படுகிறது.

தொலைபேசி இணைப்பு சரி... இணைய இணைப்பு எப்படி சாத்தியம் ஆனது?

அதற்கான விளக்கம் இங்கே. கணினிகளுக்கு இடையே தொடர்பாடல் முறையை முதன் முதலில் சிந்த்தது 1960களில் கணனி விஞ்ஞானியாகிய J.C.R. Licklider என்பவர்தான். இவர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பான ARPA (Advanced Research Projects Agency) இல் நடத்தை அறிவியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குனராக இருந்தவர்.

இவர்தான் முதன் முதலில் கணனிகளுக்கான வலைப்பின்னல் ஏன் அவசியம் என்பதை முதன் முதலில் எடுத்துரைத்தார்.

ஒருவர் வேளை இவர் சிந்திக்காது இருந்திருந்தால் இன்றைய இணைய உலகம் சாத்தியமா என தெரியவில்லை.

இதனால் அந்த ஆராய்ச்சி அமைப்பு, கணினிகளுக்கு இடையேயான வலைத்தொடர்ப்பாடல் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியது. பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கணினிகள் நிறுவப்பெற்று, அதற்கிடையேயான வலைப்பின்னல்  தொடர்பாடல் குறித்த தொழில்நுட்பங்களை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களிடம் Quotation கேட்டது.

பல நிறுவனங்கள் அந்த முயற்சி தேவையற்றது வீணானது என பின் வாங்கிக் கொண்டது. இதனால் மனம் தளராமல் இருந்த APPRA இறுதியாக BBN Technologies என்ற நிறுவனத்திற்கு வலைப்பின்னல் ஆராய்ச்சிக்கு ஒப்புதல் அளித்தது.

அதன் பிறகு நடந்த சம்பவங்கள் ஏக சுவராஷ்யம். அது குறித்து எழுதினால் இந்த பக்கம் போதாது.

ஒரு வழியாக நவம்பர் 21, 1969 இல் நிலையான ஆர்ப்பாநெட் இணைப்பு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கும் (லாஸ் ஏஞ்சல்ஸ்), ஸ்டாண்ட்போர்ட் ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் பின் அமெரிக்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் ARRPA நெட்டில் இணைந்து கொண்டன. இவ்வாறு ஆரம்ப காலங்களில் வலைப்பின்னல் பல்வேறு பரிமாணங்களை கடந்து தான் இன்று நாம் பயன்படுத்தும் இணையம்/இன்டர்நெட்/INTERNET நமக்கு கிடைத்திருக்கிறது.

சரி, தற்பொழுது நாம் பயன்படுத்தும் இணையம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

இணையம்/INTERNET எப்படி செயல்படுகிறது?

how does work internet

இணையம் (வலைப்பின்னல்) என்பது பல்வேறு உலகின் பல்வேறு கணினிகள் ஒன்றுக்கொன்று வலைப்பின்னல் வழியாக பின்னப்பட்டிருப்பதைதான் நாம் இணையம் என்கிறோம். ஒன்றிலிருக்கும் தகவல்கள் மற்றொரு கணினியின் வழியாக பெற்றிட முடியும். அதற்கு உதவுவதுதான் இவ்வலைப்பின்னல்.

வலைப்பின்னலில் இணைந்திருக்கும் கணினிகளை இருவகையாக பிரிக்கலாம்.

1. கிளையண்ட் (வாடிக்கையாளர்)
2. சர்வர் (வழங்குனர்)

எந்த கணினியில் தகவல்களை தேடுகிறோமே அதை Client  கணினி என்றும், அதற்கு வலைப்பின்னல் வழியாக தகவல்களை அனுப்பும் கணினி Server என்றும் வழங்கப்படுகிறது.

நாமெல்லாம் வாடிக்கையாளர்கள். நமக்கு தகவல் கொடுக்கும் கணினி சர்வர். அவ்வளவுதான்.

எப்படி வலை பின்னல் வழியாக தகவல்கள் நம்மை வந்தடைகிறது?

நம் கணினியில் பிரௌசர் மூலம் நாம் அனுப்பும் தகவல்கள் (உதாரணமாக ஒரு வலைத்தளத்தின் முகவரியை கொடுப்பது) DATA POCKET களாக பிரிக்கப்பட்டு, அது இருக்கும் சரியான சர்வருக்கு சென்றடைகிறது. அங்கிருந்து, நாம் அனுப்பிய பாதையின் வழியாகவே நமக்கு  திரும்ப கிடைக்கிறது.

இதை மிக விபரமாக சொல்ல வேண்டுமெனில் பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க இப்போதை இதுவே போதும் என நினைக்கின்றேன். இது குறித்து விரிவான பதிவுகள் தனி தனி பதிவுகளாக பதிவிடுகின்றேன்.

இப்பதின் மூலம் ஓரளவிற்கு இன்டர்நெட் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு பின்னூட்டம் இடுங்கள். மேலும் பதிவு பற்றிய உங்களது கருத்துகளை மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள். பதிவு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் Share செய்துகொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments