மொபைல் போன் கண்டுபிடிப்பு | வளர்ச்சி | தொழில்நுட்பம்

mobile technology

தற்காலத்தில் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் மொபைல் போன் உள்ளது. அது இல்லையென்றால் அன்றைய பொழுது போவது அவ்வளவு கடினமானதாக இருக்கிறது. ஏனென்றால் அதில் இருக்கும் பயன்கள், நம் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக போய்விட்டது.

சாதாரணமாக தொலைத்தொடர்பு வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, அதன் பல பரிமாண வளர்ச்சி (?) களில் தற்பொழுது "ஸ்மார்ட்போன்" வடிவில் வந்து நிற்கிறது.

பேசுவது மட்டுமின்றி, வீடியோ, ஆடியோ, மெசேஜ், பலதரபட்ட கோப்பு வடிவ டாகுமெண்ட்கள் என அனைத்தையும் தற்பொழுது ஸ்மார்ட்போனில் செய்ய முடிகிறது. குறிப்பிட்ட சமீப வருடங்களில் பல்வேறு பயனமிக்க/பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட "ஆன்ட்ராய்ட் ஆப்"கள் வெளியாகி, அது மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

ஒரு சிலர் அதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கொண்ட App களுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர். குறிப்பாக ShareChat, TicTok, Musically, போன்றவகள்.

நிற்க. மொபைல் தொழில்நுட்பம் பற்றிய கட்டுரையில் இதுபோன்ற முன்னுரை தேவையானதா? என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். உண்மையிலேயே இதைவிட மிகப்பெரிய முன்னுரை எழுத வேண்டும். அவ்வளவு விடயங்கள் உண்டு. சரி.. விடயத்திற்கு வருவோம்.

தொலைபேசி கண்டுபிடிப்பு



தொலைபேசியை கண்டுபிடித்தது திரு. கிராகாம் பெல். அது நமக்கு எல்லோருக்கும் தெரியும். 1847ம் ஆண்டு மார்ட் 3 ம்தேதி பிறந்த அவர் இந்த உலகிற்கு மாபெரும் கண்டுபிடிப்பை தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவரின் அயராத முயற்சிதான் தற்பொழுது "மொபைல்" போன் வடிவத்திற்கு விட்டுச் சென்றுள்ளது எனலாம்.


மொபைல் போனை கண்டுபிடித்தவர்(?)கள்: 


கம்பி மூலம் தொலைத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலம் முடிந்து, கம்பியில்லாமல் வயர்லஸ் மூலம் தொடர்பு ஏற்படுத்தி பேசுவதற்கான முயற்சியின் முதல் படி எடுத்து வைத்தது அமெரிக்கா போலீஸ்தான். அவர்கள் இரு வழி ரேடியோ தொடர்பினை ஏற்படுத்தி வயர்லஸ் தொடர்பிற்கான முதல் அச்சாரத்தை போட்டனர்.

அதன் பிறகு 1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ், சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது. இந்த நிறுவனத்தினர் வயர்கள் இல்லாத வாக்கி டாக்கி, ரேடியோவை 1947ல் கண்டுபிடித்து, ராணுவத்திற்கு வழங்கினர். அப்போது இதன் எடை மிக அதிகமாக இருந்தது. 1960–க்கு பின்பு தான் இவற்றை ஓரளவிற்கு நவீனமாக மாற்றினர்.

முதல் கையடக்க மொபைல்போன்


தற்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை 1973ஆம் வருடம் மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் கண்டு பிடித்தார். வீட்டில் அல்லது வெளியில் நடந்து கொண்டே தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளும் வித்தையை அவர்தான் முதன் முதலில் கண்டறிந்து அதனை நிரூபித்தார். இதனால் இவரை "செல்போனின் தந்தை" என அழைக்கின்றனர். இவர் கண்டுபிடித்த போனின் எடை எவ்வளவு தெரியுமா? சொன்னால் நீங்களே ஆச்சர்யபடுவீர்கள். அதிகமில்லை வெறும் 2 கிலோ தான்.

வர்த்தக ரீதியா செல்போன் பயன்பாடு.


1970 ஜப்பான் நாட்டில்தான் முதன் முதலாக வர்த்தக ரீதியான செல்போன் பயன்பாட்டுக்கு வந்தது. முதன் முதலில் வெளிவந்த அலைபேசி மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்ற மாடல் தான். இதன் விலை மிக அதிகம். 2500 பவுண்ட். இந்த விலையில் கூட அன்று உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பயன்படுத்தினார்கள்.

டிஜிட்டல் மொபைல்போன்


அதன் பிறகு மொபைல் போன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் இறுதியாக டிஜிட்டல் மொபைல்போன் தொழில்நுட்பம் (GSM) அறிமுகமாகியது. 2ஜி நெட்வொர்க்குடன் இணைந்து அவைகள் செயல்பட்டன. அதில் தான் நாம் தற்பொழுது பயன்படுத்தும் சில வசதிகள், வீடியோ கால் செய்து பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிலிருந்து மொபைல்போன் தொழில்நுட்பத்தில் ஏறுமுகம்தான். 2 கிலோ எடையில், 10 மணி நேரம் சார்ஜ் செய்யப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரமே பேச முடியும் என்ற நிலையில் இருந்த போர்ட்டபிள் செல்போன், 40 வருடங்களுக்குப் பிறகு, கையடக்கத் தொலைபேசியாக மாறிவிட்டது.

இதில் உள்ள வசதிகள் ஏராளம்.  ஒரு நாள் முழுவதும் பேச முடிகிறது. மொபைல் எங்காவது தொலைந்துபோய், வேறு ஒருவர் அதை உபயோகிக்க நினைத்தால், தானே அதிலுள்ள டேட்டாக்களை அழித்து, முடங்கி போக கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்தாகிவிட்டது.

மனிதனின் அறிவுதான் எத்தனை மாற்றங்களை பெற்று தருகிறது.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது?


இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகு முழுமையடைந்திருக்கும் செல்போன் எப்படி செயல்படுகிறது தெரியுமா? அதில் ஒரு மிகப்பெரிய சுற்று வேலைகள் நடந்த பிறகுதான் நமக்கு நாம் பேசுவது போன்ற ஒலிகள், நாம் கேட்பவரின் ஒலிகள் நம்மை வந்தடைகின்றன. அந்த வேலைகள் என்னென்ன? எப்படி நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மொபைல்போன் செயல்பாட்டில் இரு முக்கிய வேலைகள் நடைபெறுகிறது.

1. டிரான்ஸ்மிட்டிங் செக்ஸன் (Transmitting - TX)
2. ரிசீவிங் செக்ஸன்: (Receiving - RX )


1. டிரான்ஸ்மிட்டிங் செக்ஸன் (Transmitting - TX)


நாம் பேசும் ஒலி செலபோனில் உள்ள மைக்கின் வழியாக சென்று மின் அலைகள் சப்போர்டிக் காம்போனெண்ட்களின் வாழியாக Audio IC க்கு செல்கிறது. இதில் ஒலி ஆப்ளிபை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஆம்ப்ளிபை செய்யப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐசி (NetWork IC) யை சென்றடைகிறது. அங்கு ஒலிமின் அலைகள் பல மாற்றங்களை அடைந்து, ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு, அங்குள்ள பல சப்போர்ட்டிங் காம்பொனென்ட்களின் வழியாக ஆன்டென் ஸ்விட்சிற்கு செல்கிறது. அங்கிருந்து ஆன்டென வழியாக டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது. டிரான்ஸ்மிட் செய்யப்பட்ட சிக்னல்கள் காற்றின் மூலம் செல்போன் டவருக்குச் சென்று, நெட்வொர்க் ஆப்பரேட்டரின் உதவியுடன் அடுத்தவரின் செல்போனுக்கு செல்கிறது.

இவ்வாறு நாம் பேசும் ஒலியானது மின் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு, சில பகுதிப் பொருட்களின் மூலம் அவைகளை ரேடியோ சிக்னல்களா மாற்றப்பட்டு, காற்றின் வழியாக நெட்வொர்க் டவருக்கு சென்று, அங்கிருந்து அடுத்தவரின் செல்போனுக்கு செல்கிறது.

2. ரிசீவிங் செக்ஸன் (Receiving - Rx)


முன்பு குறிப்பிட்டதை போலதான். அப்படியே ரிவர்ஸ் ஆகும். இதை ரீசிவிங் செக்சன் என்பர். மற்றவர் நம்மிடம் பேசும்போது, அவருடைய செல்போனில் இருந்து வரும் ஒலி-மின் அலைகள் ரேடியோ அலைகளுடன் கலந்து வரும்.
அந்த அலைகள் நமது செல்போன் ஆன்டனா மூலம் ஆன்டனா Switch ற்கு வருகிறது. அங்குள்ள சப்போர்டிங் காம்பொனெண்ட்கள் மூலம் நெட்வொர்க் ஐசிக்கு செல்கிறது. அங்கே ரேடியோ அலைகளிலிருந்து ஒலி-மின் அலைகள் தனியாக பிரிக்கப்படும்.

பிரிக்கப்பட்ட ஒலிமின் அலைகள் நெட்வொர்க் ஐசியிலிருந்து ஆடியோ ஐயிக்கு செல்கிறது. அங்கு ஒலிமின் அலைகள் ஆம்ப்ளிபை செய்யப்பட்டு, ஒலிமின் அலைகள் ஒலி அலைகளாக மாற்றப்படுகிறது. அந்த ஒலி அலைகளைதான் நாம் ஸ்பீக்கரின் கேட்கிறோம்.

இத்தனை செயல்களும் ஒரு சில விநாடிகளில் நடைபெறுகிறது. அதனால்தான் நாம் , எதிர்முறையில் இருப்பவர்கள் பேசுவது/கேட்பது உடனுக்குடன் நடைபெறுகிறது. இதுவே வீடியோ அழைப்பு எனில் ஒரு சில வினாடிகள் தாமதபடும்.

இரு வேறுபட்ட ஒலி/ஒளி அலைகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டு, அவைகள் நம்மை வந்தடைவதற்கு ஒலி அலைகளைவிட ஒரு சில வினாடிகள் கூடுதலாக தேவைப்படுகிறது. எனவேதான் வீடியோ அழைப்புகளில் ஒளி/ஒலி வேறுபாடு சிக்கல்கள் சில நேரங்களில் ஏற்படுகிறது.


Post a Comment

0 Comments