பென் டிரைவ் - ஒரு பார்வை

 பெண் என்றால் நமக்குத் தெரியும். ஆண்பால், பெண்பால் இருபால் உண்டு. அது என்ன பென் டிரைவ்? அப்படியென்றால் எழுதுவதற்கு உபோயகப்படும் பொருளா? எழுதுகோலைத்தான் நாம் Pen என்று அழைப்போம் ஆங்கிலத்தில். அது மட்டுமே நமக்கு தெரிந்து வழக்காடல் சொல். காலங்காலமாக அதையே நாம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். 


கனிணி யுகத்தில் பென்டிரைவ் என்பது ஒரு தரவு தேக்கிப் பொருள் (சேமிப்பகம்). அதில் நம்மிடமுள்ள போட்டோஸ், கனிணி மென்பொருட்கள், வீடியோ, டாகுமெண்ட் போன்ற கோப்புகளை (Files) சேமிக்க உதவும் ஒரு வன்பொருள். 


ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக, கையடக்கப் பொருள் மூலம் தரவுகளை சேமித்து எடுத்துச் செல்ல, வேண்டிய போது மற்றவர்களுக்கு சேமித்துக் கொடுத்து அனுப்ப என உருவாக்கப்பட்டதுதான் PENDRIVE எனப்படும் கையடக்க சேமிப்பகம்.


அது இன்று பல கொள்ளளவுகளில் கிடைக்கிறது. கொள்ளவு என்பது கோப்புகளின் அளவுகளைக் குறிக்கும். சாதாரணமாக 1GB கொள்ளளவுகளில் கிடைத்த பென்டிரைவ், தற்பொழுது தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக 16 GB வரைக்கும் சேமிக்க கூடிய வகையில் கிடைக்கிறது. 


பென்டிரைவ் பற்றி விரிவாக அறிந்துகொள்ள இந்த விக்கிபீடியா கட்டுரைத்தொகுப்பு உங்களுக்கு உதவும். இதில் பென்டிரைவை தமிழில் "விரலி" என்ற பதம் கொண்டு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் USB Flash Drive என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


பென் டிரைவ் கம்பெனிகள்: 


பென்டிரைவ் கம்பெனிகள் பொறுத்தவரை  முதன்மையானதும், மிக பிரபலமானதும் ஆன நிறுவனம் Sand Disk நிறுவனம்தான். அது பல கொள்ளவுகளில் விரலிகளை உருவாக்கு விற்பனைக்கு விடுகிறது. அதன் பின்பு உள்ள நிறுவனங்கள் HP, SONY, TRANSCEND, TOSHIBA, KINGSTON, LEXAR, SILICONPOWER, ADATA, iBall போன்ற பிரதான நிறுவனங்களும் உண்டு. இதில் HP ம் , Sand Disk நிறுவனங்களும் தரமான பென்டிரைவ்களை போட்டோ போட்டிக்கொண்டு வழங்கி வருகின்றன.  


pendrive companies

எந்த கம்பெனி சிறந்தது? 


இதில் சிறந்த கம்பெனி என்பதை முன்பே பதிவில் குறிப்பிட்டுள்ளேன். Sandisk கம்பெனி மிக பிரபலமான தரமான பென்டிரைவ்களை வழங்கி வருகின்றன. HP கம்பெனியும் அந்தளவுக்கு ஈடான விரலிகளை தயாரித்து வழங்குகின்றன. Sony நிறுவனமும் சளைத்ததல்ல. ஆனால் விலை மற்றும் தரம் என்று வருகையில் SANDISK கை மிஞ்ச ஆளில்லை. 


Post a Comment

0 Comments