விண்டோஸ் 10 வசதிகள் - மேம்படுத்தல்கள்


5 features of windows 10

வணக்கம் நண்பர்களே.. விண்டோஸ் 10 வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதனைப் பயன்படுத்ததான் நண்பர்கள் இன்னும் தயங்கி கொண்டே உள்ளனர். காரணம் அதில் உள்ள வசதிகள்/அமைப்புகள் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவைகளாக இருப்பதுதான்.

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் அதற்கு அடுத்த பதிப்புகளாக வெளிவந்த விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10 பதிப்புகளை விரும்பவில்லை என்பது நான் பலரிடம் விசாரித்தபோது தெரிய வந்தது.

இன்னும் கூட விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அதற்கு அப்டேட்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட, அதிலேயே பணிபுரிந்தவர்கள் அடுத்தடுத்த பதிப்புகளை பயன்படுத்த விரும்பவில்லை.

ஆனால் புதிய பதிப்புகளில் வெளிவந்துள்ள அம்சங்களை நோக்குகையில் அவற்றை பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்பதை புரிய வைக்கவே இந்த பதிவு.

அதிக வேகம், முன்னைய பதிப்புகளில் உள்ள பிழைகள் அனைத்தையும் திருத்தி தான் புதிய பதிப்புகள் வெளிவருகின்றன. இதுபோன்ற அடிப்படை  விடயங்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. எனவே தான் என்னைப் போன்ற கணினி ஆர்வலர்கள் புதிய பதிப்பினை பயன்படுத்தச் சொல்லி பயனர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

விண்டோஸ் 10 ஒரு பார்வை


சமீபத்தில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் 10 பதிப்பில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்களில் ஒன்று தான் ஸ்டார்ட் பட்டன். ஆரம்பத்தில் வெளியான Windows 10 பதிப்பில் start Button வசதி இல்லாமல் இருந்தது. இது பலருக்கும் பிடிக்கவில்லை. எனவேதான் அந்த வசதியை மீண்டும் கொண்டு வந்தது.

விண்டோஸ் 10 புதிய வசதிகள்


ஸ்டார்ட்மெனு

விண்டோஸ் 7 ல் உள்ள ஸ்டார்ட் மெனு போல இல்லாமல் இது முற்றிலும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது. விண்டோஸ் 8 ல் இருந்ததுபோல live tiles என்ற ஐகான்களை ஸ்டார்ட் மெனுவை அழுத்துவதன் மூலம் பெற முடியும். இதில் முன்பு போல ப்ரோகிராம்களை search செய்து தேடிக்கொள்ளலாம்.

கோர்ட்னா - டிஜிட்டல் உதவியாளர்

ஆன்ட்ராய்டில் உள்ள Google Now போன்றது இந்த தானியங்கி ப்ரோகிராம். Cortana டிஜிட்டல் உதவியாளினியை இயக்கி குரல் மூலம் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இது ஸ்டார்ட் மெனுவிற்கு பக்கத்தில் அமைந்திருக்கும்.

யுனிவர்சல் ஆப்ஸ்


FEATURES OF WINDOWS 10

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ உருவாக்குவதற்கு முன்பு, இது எந்த ஒரு கருவியிலும் தொழிற்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தது. அதை விண்டோஸ் 10 மூலம் உருவாக்கி முழுமையடைய வைத்துள்ளது. அதாவது ஒரே இயங்குமுறை கணினி, டாப்லட், ஸ்மார்ட்போன் போன்ற எந்த ஒன்றிலும் இயங்கும் வகையில் உருவாக்கியது.

அப்படி அனைத்து கருவிகளிலும் இயங்குவதற்கு ஒரு ஆப்ஸ் தேவைப்பட்டது. அதுதான் யுனிவர்சல் ஆப்ஸ். இதில் உள்ள மிகப்பெரிய ஒரு ப்ளஸ் என்பது அனைத்து கருவிகளிலும் இயங்க கூடியது என்பதுதான்.

இனைய உலாவி – எட்ஜ் (Edge)

ஆரம்ப காலத்தில் முதலே இருந்த மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர்ருக்கு இது ஒரு முடிவு கட்டியது. ஆம். இன்டர்நெட் எக்ஸ்ப்ரோளர் உலவிக்கு பதிலாக புதிய இணைய உலாவி எட்ஜ் -ஐ மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் அறிமுகப்படுத்தியது. இது கூகிள் குரோம்  போல செயல்படுகிறது. இதன் கூடவே முன்பு குறிப்பிட்ட கோர்ட்னா உதவியாளர் இணைந்திருப்பது சிறப்பம்சம். இணைய உலவியேலே பேசி கட்டளைகளை நிறைவேற்றிட முடியும். மேலும் ஃபயர்பாக்ஸ், கூகிள் குரோம் போன்று இதிலும் Add Ons சப்போர்ட் செய்யும் வசதியும் உண்டு.

ஒன்றிணைக்கப்பட்ட அறிவிப்பு பலகை (Notification center)


ஆன்ட்ராய்ட் போனில் உள்ள நோட்டிபிகேசன் வசதியைப் போன்று விண்டோஸ் 10 லும் ஒன்றிணைக்கப்பட்ட அறிவிப்பு பலகை (Notification center) வசதி உருவாக்கப்பட்டது. இதில் ஆப்ஸ், அலாரம் மற்றும் விண்டோஸ் அறிவிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற முடியும் .

மெய்நிகர் டெஸ்க்டாப் வசதி 


மெய்நிகர் டெஸ்க்டாப் வசதி என்றால் ஆங்கிலத்தில் Virtual Desktop. இது என்னவென்று இன்றும் பலருக்கு தெரிவதில்லை. இந்த வசதியை இதற்கு முன்பு விண்டோஸ் இயங்குதளம் கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது விண்டோஸ் 10 பதிப்பு தன்னகத்தே இந்த வசதியை கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறுபட்ட பணிகளை ஒரே நேரத்தில் செய்திடலாம்.

மெயில், காலண்டர், மியூசிக் ஆப்ஸ்


புதியதாக இந்த வசதிகள் விண்டோஸ் 10ல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெயில், காலண்டர் ஆப்ஸ் மிக பயனுள்ளதாக இருக்கிறது. முன்பு இருந்ததை போல outlook கணக்கை மட்டும் பயன்படுத்தும் நிலை மாறி, தற்பொழுது இதன் மூலம் யாஹூ, ஜிமெயில், போன்ற மின்னஞ்சல் சேவைகளையும் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

Windows 10 Groove Music என்ற ஆடியோ ப்ளேயர், முன்புவிண்டோஸ் 8 ல் இருந்த மீடியோ ப்ளேயரைவிட மேம்படுத்தப்பட்டதாக , வசதிகள் மிக்கதாக கொண்டு வரப்பட்டுள்ளது.

செட்டிங்ஸ் ஆப்

கண்ட்ரோட் பேனலுக்கு பதிலாக, செட்டிங்ஸ் ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 8 லும் இருந்தது. அதைவிட தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, பயன்படுத்துவதற்கு இலகுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தினை முன்பதிவு செய்து அனைவரும் இலவச அப்கிரேடுகளை பெற முடியும். ஆனால் இங்கு தான் அந்நிறுவனம் புதிய முறையை பின்பற்ற இருக்கின்றது.

windows 10 ilavasamaga install
புதிய இயங்குதளத்தை பயன்படுத்த ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பெற்றிருக்க வேண்டும். பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா க்ரியேஷன் டூலினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதோடு சிறப்பான இன்டர்நெட் வசதியும் இருக்க வேண்டும்.
புதிய இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யும் முன் உங்களது தகவல்களை பேக்கப் செய்து கொண்டு கீழ் இருக்கும் ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Media Creation Tool 32-bit Windows
Media Creation Tool 64-bit Windows

புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பதிவிறக்கம் செய்வது எப்படி ?



  • இதற்கென உள்ள மீடியா க்ரியேஷன் என்ற டூலினை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். 
  • பிறகு, மீடியா க்ரியேஷன் டூலில் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் விண்டோஸ் 10 பதிவிறக்கத்தை தொடங்கலாம்.
  • உங்களது இணைய வேகம் குறைவாக இருப்பின் பதிவிறக்கம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். வேகம் அதிகமாக இருப்பின் சற்று குறைந்த நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு  உங்களது டவுன்லோடு வெரிஃபை செய்யப்படும். இங்கு விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு தேவையான அனைத்து ஃபைல்களையும் சேகரிக்கப்படும். 
  • அதன் பிறகு, விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் லோடு ஆகும். விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் சில சோதனைகளை மேற்கொள்ளும்.  அதன் பிறகு விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷன் துவங்க லைசென்ஸ் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 
  • இன்ஸ்டால் செய்யப்படும் முன், இறுதியாக அனைத்து அப்டேட்களையும் இன்ஸ்டாலர் டூல் சோதனை செய்யும். இங்கு அனைத்து வழி முறைகளும் முடிந்து விடும்.


இத்தனையும் முடிந்த பிறகு ,  Install பட்டனை க்ளிக் செய்து விண்டோஸ் 10 இயங்குதளத்தை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்யத் துவங்கலாம்.

இங்கு உங்களுக்கு தேவையான ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்த துவங்கலாம்.

நான் விண்டோஸ் 10 பயன்படுத்திக் கொண்டுள்ளேன். ஓராண்டாக பயன்படுத்தியதில் அவற்றில் எந்த ஒரு பெரிய பின்னடைவும் இருந்ததில்லை. பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் சற்று சிரமாக இருந்த்து. எனினும், பழக பழக அதன் வசதிகளின் அருமை புரிந்தது. பயன்படுத்தவும் எளிதாக உள்ளது.

நீங்கள் ஒரு விண்டோஸ் 10 பயனர் எனில் உங்களுடைய அனுபவங்களை இங்கே கருத்துகளாக பதவிடலாம். மேலுள்ள லிங்கில் சென்று Windows 10 ஆபரெட்டிங் சிஸ்டம் டவுன்லோட் செய்து கொள்ளவும். மைக்ரோசாப்ட் இதை நமக்கு இலவசமாக வழங்குகிறது. இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருக்குமேயானால் பேஸ்புக், ட்விட்டர்,  போன்ற சமூக இணையதளங்களில் பகிர்ந்து, உங்களுடைய நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். 

Post a Comment

0 Comments