இணைய பாதுகாப்பு | இலவச மென்பொருட்கள்


explanations of internet security

இணையம் பயன்படுத்தும் நாம், அதிலிருந்து நம் கணினிக்கோ, மொபைல் போனுக்கு பரவும் வைரஸ், தகவல் திருடும் புரோகிராம்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நன்றாக படித்தவர்கள் கூட அது பற்றிய பெரியதாக கவலைபடுவதாக தெரியவில்லை. விளைவுகளைப் பற்றி அறியாமல் இணையத்தைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அதனால் ஏற்படும் தொல்லைகளால் பிரச்னைக்கு உள்ளாகின்றனர்.

இணையத்தில் என்ன பிரச்னை இருக்க போகிறது? நமக்கு விருப்பமான இணையதளங்களை பார்வையிட்டோமா? வீடியோ, சினிமா, விளையாட்டுகளை விளையாடினோமா என்ற அசமந்த நிலைமையில் தான் பலரும் இருக்கிறோம்.

ஆனால் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு இணையதளமும், இணையத்தில் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இணைய திருடர்களால் கண்காணிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் நண்பர்களே.... அதுதான் சாசுவதம்.

அதற்காகத்தான் தற்பொழுது இணையதள உரிமையாளர்களுக்கு ஐரோப்பிய நாடுக் ஒரு மிகப்பெரிய கண்டிசனை போட்டிருக்கிறது. அதாவது இணையதளம் மூலம் பயனர்களின் தகவல்களை எப்படியெல்லாம் அவர்கள் பெறுகிறார்கள் என்பதை முகப்பு பக்கத்திலேயே தெரிவிக்க வேண்டும் என்று சட்டமியற்றி செயல்படுத்தியிருக்கிறார்கள்.

காரணம் இணையத்தளங்கள் Cookies என்ற  விடயம் மூலம் நீங்கள் இணையத்தில் உலவும்போது என்னென்ன மாதிரியான தகவல்கள், நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை கண்காணித்து, அந்த தகவல்களை இணையதள அட்மின்களுக்கு அனுப்புகிறது.

அது பயனர்களின் உரிமையை பாதிக்க கூடிய விடயம் என்பதால்தான் ஐரோப்பா முதலான நாடுகளில் இந்தக்கட்டுப்பாடு.

நீங்கள் பார்வையிடும் அனைத்துவிதமான இணையதளங்களிலும் இதுபோன்ற Cookie Policy பக்கங்கள் உருவாக்கப்பட்டு, அதை பயனர்களுக்கு ஒரு தகவலாக முகப்பு பக்கத்திலேயே காட்டியிருப்பார்கள்.
அதை போன்று பலதரப்பட்ட புரோகிராம்கள் உங்கள் கணினி, மொபைல் வழியாக வந்தடைந்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணித்து சில தகவல்களை திருடும். ஒரு சிலவோ உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப விளம்பரங்களை காட்டி ஈர்க்கும். இன்னும் ஒரு சில புரோகிராம்களோ தகவல்களை திருடி, மற்ற நிறுவனங்களுக்கு விற்றுவிடும். இவையாவும் உங்கள் கண்களுக்கு புலப்படாது என்பதுதான் ஹைலைட்.

இப்போதெல்லாம், நேரடியாக நிகழும் குற்றங்களைவிட,  இணைய வழி குற்றங்கள்தான் அதிக சேதத்தையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருந்தது கூட இணையவழி தொடர்பு தான். அதுபோன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இணையத்தில் நடக்கும் தவறுகளைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் இணையப் பாதுகாப்பு மிக மிக அவசியமாகிறது.


சரி.. இதற்கு என்னதான் தீர்வு?

இணைய பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவைகள்


100க்கு 100 தீர்வு முழுமையாக இணையபாதுகாப்பு விடயத்தில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு 99% பாதுகாப்பினை நாமே உறுதி செய்துகொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டியவை.

1. நல்ல தரமான ஆன்ட்டி வைரஸ் கணினியில் நிறுவுவது.
2. தேவையற்ற இணையதளங்களுக்கு செல்லாமல் இருப்பது.
3. தேவைப்பட்டால் ஒழிய, மென்பொருட்களை இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் இருப்பது.
4. சினிமா, வீடியோ, ஆடியோ, போட்டோஸ் என எந்த ஒரு கோப்புகளையும் முடிந்தளவு டவுன்லோட் செய்யாமல் இருப்பது.
5. அடுத்தவரிடம் பெற்று பென்டிரைவ், சிடி, டிவிடி போன்ற பொருட்களை நம் கணினியில் பயன்படுத்தாமல் இருப்பது

இதுபோன்ற செயல்களை ஈடுபடாமல் இருந்தாலே 80% வைரஸ் வரும் வழிகளை அடைத்திடலாம்.


இதெல்லாம் செய்யாமல் எப்படிய்யா இருப்பது? என்ற நிலைமையில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்திருப்பது நல்லது. ஆன்டி வைரஸ் நிறுவி, ஸ்கேன் செய்த பிறகு அவற்றை பயன்படுத்திடலாம்.

என்னென்ன மென்பொருட்கள் இணைய பாதுகாப்பினை வழங்குகிறது?


பொதுவாக ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள்அனைத்துமே இணைய பாதுகாப்பினை வழங்க கூடியவைதான். அவற்றில் சிறந்த வசதிகளை கொடுத்து, அவ்வப்பொழுது புதிய வைரஸ்கள் ஏதேனும் உருவாக்கப்பட்டால், அதற்கு எதிராக செயல்படக்கூடிய அப்டேட்களை வழங்கும் மென்பொருட்கள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஏனென்றால் உங்களிடம் உள்ள ஆன்ட்டி வைரஸ் நீங்கள் இன்ஸ்டால் செய்திடும்பொழுது இணையத்தில் சுமார் 1000 வைரஸ் இருக்கிறதென்றால், அடுத்த ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் புதிய வைரஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரவிக்கொண்டிருக்கும்.

அதாவது உங்களிடம் உள்ள ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் அந்த வைரஸ்சை கணினியை பாதிக்காத வகையில் தடுக்க முடியாத திறன் பெற்றிருக்கும். எனவேதான் புதிய வைரஸ்களையும் எதிர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை வழங்கும் Avira, Avast, AVG, Norton, Kaspersky போன்ற மிகத்துல்லியமாக வைரஸ்களை கண்டறியக்கூடிய மென்பொருட்களை, அதுவும் கட்டணம் செலுத்திப் பெறக்கூடிய Premium Anti Virus மென்பொருட்களை வாங்கி, கணினியில் பதிந்துகொள்ள வேண்டும்.

இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் என்றுமே இலவசமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலவசமாக கொடுக்க அவர்கள் ஒன்றும் வள்ளல்கள் ஒன்றும் கிடையாது. எல்லாமே வியாபார நோக்கம்தான்.

முதலில் இலவசம் போல கொடுப்பார்கள். அதிலும் அடிப்படை வசதிகள் ஒரு சில மட்டும்தான் இருக்கும். 100% பாதுகாப்பினை அவைகள் வழங்காது. குறிப்பிட்ட வாய்தா நாள் முடிந்த பிறகு, அதை கட்டணம் செலுத்தி வாங்க சொல்வார்கள். அதனால்தான் Trail Version , Free Version பதிப்புகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

இதனால் உங்கள் மதிப்பு மிக்க தகவல்கள் அனைத்தும் பாதுகாத்திட வேண்டுமென்றால் நிச்சயம் Paid Version மென்பொருட்கள் மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

இலவசத்தை கொடுத்து நாட்டை கெடுத்து கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளைப் போல தான் இலவச மென்பொருள் தரும் நிறுவனங்களும். சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடித்துவிடுவார்கள். முதலியே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் போனால் போகிறதென்று கட்டண மென்பொருளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

இணைய பாதுகாப்பு சாதக பாதகங்களை இங்கும் வாசிக்கலாம்.

இணைய பாதுகாப்பில் நாடுகளின் தரவரிசை

இணைய பாதுகாப்பில் இந்தியா 23 வது வரிசையில் உள்ளது. முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்தோனியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த கட்டுரையில் எழும் கேள்விகள் - பதில்கள்


கட்டணம் செலுத்தி வாங்க முடியாத நிலை. நான் என்ன செய்வது?

வேறு வழியில்லை என்ற நிலைமை இருப்பவர்கள் இலவச மென்பொருட்களை சோதனைக்காக பயன்படுத்தலாம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. அதனால்தான் நான் அவற்றை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன்.

இலவச மென்பொருட்கள் அனைத்துமே ஆபத்தானவையா?

அனைத்துமே ஆபத்தானவை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. என்றாலும், பெரும்பாலானவை உங்கள் கணினியின் இடத்தை அடைப்பவைதான். அதனால் பெரிதான பயன் ஏதும் இருக்காது. அது தரும் வசதிகளை நீங்களாகவே செய்துவிடலாம்.

உதாரணமாக தேவையற்ற குப்பையான கோப்புகளை Temp File களை Start==>R கொடுத்து, அதில் %temp% என டைப் செய்து, என்டர் கொடுத்தால், டெம்ப் போல்டர் ஓப்பனாகும். அதை Sellect All கொடுத்து டெலீட் செய்துவிட்டு போய்விடலாம். இதற்காக தனியான ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியின் வேலையை , செயல்படும் திறனை குறைப்பானேன்?

இதுபோன்று உங்களுக்கும் கேள்விகள் - சந்தேகங்கள் அல்லது இந்த கட்டுரையை பற்றிய கருத்துகள் இருப்பின் இங்கு கமெண்ட் பாக்சில் தெரிவிக்கலாம். இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள், குடும்ப நபர்கள், மாணவர்கள் போன்றவர்கள் Facebook, Whatsapp போன்ற சமூக இணையதளங்களில் பகிர்ந்திடலாம். அதற்கான sharing buttons கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments