நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 ஆன்ட்ராய்ட் மொபைல் ட்ரிக்ஸ்

5 mobile tricks you should follow

இன்று ஆன்ட்ராய்ட் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, உலகில் 90% நபர்கள் ஆன்ட்ராய்ட்/ஆப்பிள் போன்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ஆன்ட்ராய்ட் போன்களின் பயன்பாடு அதிகம்.

குறைந்த விலை, அதிக பயன்கள் என்ற வகையில் இவ்வகை போன்கள் அமைந்திருப்பதால் ஏழைகள் வீட்டில் கூட ஒன்றிரண்டு போன்கள் இருக்கவே செய்கின்றன. இதுபோன்ற அனைத்து நிலை மக்களுக்கும் பயன்மிக்கதாக இருக்கும் இந்த திறன்பேசியில் சில ட்ரிக் பயன்படுத்துவதன் மூலம், அதை மிக பயன்படுத்தவது இன்னும் சுலபமாகும். அதே சமயம் ஒரு சில செட்டிங்ஸ் (அமைப்பு) களைச் செய்வதன் மூலம் அதனுடைய பாதுகாப்பினை மேம்படுத்திக்கொள்ள இயலும்.

என்னென்ன ட்ரிக்? என்னென்ன பாதுகாப்பு விடயங்கள் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.

தொலைந்த போனை உங்களிடம் சேர்ப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவைகள்:


1. உங்களுடைய மொபைல் திடீரென தொலைந்துபோனால், அதை எடுத்தவர் உங்களிடம் அந்த போனை ஒப்படைக்க போதுமான விபரம் வேண்டும் அல்லவா? அதுபோன்ற சூழ்நிலையில் அவருக்கு உதவக்கூடியதுதான் இந்த செட்டிங்கஸ்.

பெரும்பாலான போன்களில் Screen Security மெனுவில் Owner Info இருக்கும். அதை டச் செய்து, அந்த பகுதியில் உங்கள் மொபைல் நம்பர் போன்றவற்றை கொடுத்து சேமித்துவிடலாம். இதனால் மொபைல் போன் லாக்கில் இருந்தாலும், பெயர், தொடர்பு எண் போன்றவை ஸ்கிரீன் டிஸ்பிளேயில் தெரியும்.

இதில் கான்டாக்ட் நம்பராக உங்களது நண்பர், அல்லது குடும்பத்தினர் எண்ணாக இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களுக்கு போன் செய்து தகவல்கள் தெரிவிக்க முடியும்.

ஏதாவது விபத்தின் போதும் கூட உங்களுடைய போனிலிருந்து , உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். போனை எடுத்தவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் இந்த முறை உங்களுக்கு உதவும்..

2. விரைவு அழைப்பு வசதி 


ஒரு சிலருக்கு அடிக்கடி போன் செய்ய வேண்டியிருக்கும். அதுபோன்ற நபர்களின் எண்களை இப்படி செய்து கொண்டால், அடிக்கடி கான்டாக்ட் அல்லது ரீசன்ட் லிஸ்ட் சென்று போன் செய்ய வேண்டிய தேவை இருக்காது. எப்படி என்று பார்ப்போம்.

உங்களுடைய போன் ஸ்கிரீனில் long press செய்யுங்கள்.. 2 நொடிகள் விரலை எடுக்காமல் செய்தால், ஷேர்ட்கட் சேர்க்கும் மெனு தோன்றும். அதில் கான்டாக்ட்ஸ் டச் செய்து, நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு சில எண்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவைகள் கான்டாக்ட்  பெயருடன் ஷார்ட்கட்களாக உங்கள் ஸ்கிரீனில் தோன்றும். தேவையானபோது அந்த ஷார்ட்கட்டை டச் செய்து அழைப்புகளை ஏற்படுத்தலாம். SMS அனுப்பலாம்.




எப்படி செய்வது?

1. உங்கள் மொபைல் போனில் ஸ்கீரின் 2 நொடிகள் லாங் பிரஸ் செய்யவும்
2. இப்பொழுது ஷார்கட் சேர்க்கும்மெனு தோன்றும்.
3. அதில் கான்டாக்ட் என்பதை டச் செய்யவும்.
4. உங்களுடைய கான்டாக்ட்ஸ் தோன்றும்.
5. அதில் வேண்டிய நபர்களின் எண்களை தெரிவு செய்து OK கொடுக்கவும்.

அவ்வளவுதான். இனி நீங்கள் தெரிவு செய்த தொடர்பு எண்கள் அத்தனையும் ஷார்ட்கட் ஐகான்களாக மாறி, உங்கள் ஸ்கிரீனில் தோன்றும். அதை டச் செய்து CALL/SMS செய்துகொள்ளலாம்.

3. டேட்டா அலர்ட் செட்டிங்ஸ் : 


இது ஆன்ட்ராய்ட் போனில் இன்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாதம் ஒன்றிற்கு குறிப்பிட்ட டேட்டா அளவிற்கு மட்டும் ரீசார்ஜ் செய்திருப்போம். அந்த அளவு மீறி போனால், ஒன்று அதிகளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது இன்டர்நெட் வேகம் மிக குறைவாக மாற்றப்படும். இந்நிலை ஏற்படாமல் குறிப்பிட்ட அளவு டேட்டவை மாதம் முழுமைக்கும் பயன்படுத்திட இந்த டேட்டா அலர்ட் செட்டிங்ஸ் நிரம்பவே உதவும். அதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

ஸ்மார்ட் போனில் Settings -> Data Usage சென்று, அங்கு குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட டேட்டாவின் அளவை கொடுத்துவிட்டால், அந்த குறிப்பிட்ட தேதிக்குள், அந்த டேட்டாவிற்கு மேல் போகும்போது தானாகவே ஸ்மார்ட்போன் டேட்டாவை பயன்படுத்துவதை நிறுத்திவிடும். இன்டர்நெட்டிற்காக ஆகும் கூடுதல் செலவை தவிர்த்திடலாம்.

4. ஒரு மொபைலில் பல புரோபைல்கள் - பயன்கள்:


ஒரு மொபைல் போனில் ஒரு ப்ரோபைல் இருந்தால் போதுமானதுதான். ஆனால் நாம் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் சரிதான். குடும்பத்தில் குழந்தைகள், உறவினர்கள் போன்றவர்கள் பயன்படுத்த வேண்டி வந்தால், அவர்களுக்கென தனி ப்ரொபைல் உருவாக்கி, பயன்படுத்த கொடுத்துவிடலாம். இதனால் உங்களுடைய கேலரி, கான்டாக்ஸ்ட்களை அவர்கள் பயன்படுத்த முடியாது. குறிப்பாக குழந்தைகளின் ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்திடும்பொழுது, தவறிபோய் முக்கியமான ஆப்களை டெலீட் செய்துவிடும் சாத்தியம் உண்டு. அதே போல உங்களுடைய உயர் அதிகாரிகள், தலைவர்கள் போன்றவர்களுக்கு தவறுதலாக அழைப்பு ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. எனவேதான் இந்த செட்டிங்ஸ் செய்துவிட்டால்,அதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

எப்படி செய்வது?


உங்களுடைய ஸ்மார்ட் போனில் Settings => Users சென்று ஒரு புதிய ப்ரோபைல் உருவாக்கிடவும். அதற்கு நீங்களே கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். மீண்டும் தேவையான போது Owner Profile க்கு மாறிவிட முடியும். உங்களுடைய ப்ரோபைலில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் மாறாமல் அப்படியே இருக்கும்.

இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், கீழுள்ள கமெண்ட்பாக்சில் கமெண்ட் செய்யவும். இந்த பதிவு குறித்த கருத்துகளை எழுதுங்கள். பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்.

OK MAPS செய்யுங்கள்: இடத்தை கண்டுபிடியுங்கள்

கூகிள் மேப்ஸ் பயன்படுத்திதான் இப்பொழுது எல்லாம் புதிய இடங்களுக்கான வழித்தடங்களை கண்டுபிடித்து, உரிய இடத்தை மிகச் சரியாக சென்றடைகிறோம். இது ஆன்லைனில் மட்டுமே சாத்தியம். ஒருவேளை செல்ல வேண்டிய இடத்தில் நெட்வொர்க் சிக்னல் வீக்காக இருந்தால், கூகிள் மேப்சில் வழியை கண்டுபிடிப்பது சிரமமமாக இருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க நெட்வொர்க் இருக்கும் இடத்திலேயே சர்ச் பாரில் OK Maps என டைப் செய்தால செல்ல வேண்டிய இடத்திற்கான வழித்தட மேப் நமக்கு டவுன்லோட் செய்திட கிடைக்கும்.

அதன் பிறகு அந்த மேப்பை வைத்து, நாம் சரியான இடத்திற்கு சென்றடைந்துவிடலாம். இது ஒரு சுலபமான வழிதான். நிச்சயமாக நெட்வொர்க் இல்லாத , சரியாக கிடைக்காத இடங்களில் இந்த ட்ரிக் பயனுள்ளதாக இருக்கும்.


Post a Comment

0 Comments