சாதாரண லேப்டாப்பை தொடுதிரையாக மாற்றிடலாம் வாங்க !

get your touch screen on your laptop

சில நேரங்களில் சில மேஜிக்குகள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தும் கூட அது உண்மையாக மாறும்பொழுது, அதை நம்மால் நம்ப முடியாது. அதுபோன்ற ஒரு தொழில்நுட்பம்தான் இது. சாதாரணமாக நாம் கண்களை வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப் திரையை தொடுதிரையாக மாற்றி, அதில் தொட்டு தொட்டு விளையாடும் மேஜிக் இது.

ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயமாக எனக்கும் அப்படிதான் இருந்தது. எப்படி அது சாத்தியம் என பார்க்கும்போதுதான் அதற்கென பிரத்யேகமாக ஒரு சிறிய கருவியை நியோனோட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது தெரியவந்தது..

ஒரு சிறிய பட்டை போன்றுள்ள இந்த கருவியை உங்கள் லேப்டாப்பில் பொருத்தி விட்டால் போதும். இது உமிழும் ஒளியை நாம் தொடுவதன் மூலம், அந்த உணர்வை வாங்கி, கணினிக்கு கட்டளைகளாக செலுத்துகிறது.

அதை புரிந்துகொள்ளும் லேப்டாப்,  அது பெறும் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகிறது. .

நாம் திறன் பேசியில் எப்படி திரையை தொட்டு பயன்படுத்துகிறோமோ அதே போல சாதாரண லேப்டாப் திரையையும் மாற்றிவிடுகிறது இந்த கருவி.

எப்படி செயல்படுகிறது?


நீண்ட பட்டை வடிவில் இருக்கும் இந்த கருவியின் பெயர் "ஏர்பார்". இதன் இருமுனையிலும் காந்தம் இருப்பதால் லேப்டாப் ஸ்கிரீனில் பொருத்துவது மிக சுலபம்.

பொருத்திய பிறகு யூஎஸ்பி கேபில் மூலம் லேப்டாப்பில் இணைத்துவிட்டால் போதும். இது நம் கண்ணுக்குத் தெரியாத சிக்னல்களை வெளியிட்டு, அதன் மூலம் இயங்குகிறது.

கணினியில் நாம் வழக்கமாக செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த தொடுதிரை தொழில்நுட்பத்தின் மூலம் (ஜீரோ ஃபோர்ஸ் சென்சிங் டெக்னாலஜி) செய்யலாம்.

உதாரணமாக கேம் விளையாடுவது, பெயிண்ட் வரைவது, போட்டோஷாப்பில் வேலை செய்வது, பிரௌசிங் செய்வது போன்ற அத்தனை வேலைகளையும் மிக சுலபமாக செய்ய முடியும்.

ஒரே நேரத்தில் பல தொடுகளை உணர்ந்து, உடனே செயல்படுகிறது. இது பயன்படுத்தும் மின்சாரம் மிக சொற்பம்தான்.

இதற்கான தனியாக மென்பொருள் எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. லேப்டாப்புடன் இணைந்து செயல்படுகிறது.

இதில் இருக்கும் ஒரே பின்னடைவு தற்பொழுது சமீபகாலமாக வெளிவந்துள்ள விண்டோஸ் (8,  10)இயங்குதளங்களில் மட்டுமே இது தொழிற்படும் என்பதுதான்.

பெரும்பாலான கணினி பயனர்கள் அனைவருமே புதிய பதிப்பிற்கு மாறிவிட்டனர் என்பதால் இதை பெரிய சிக்கலாக நினைத்தத் தோன்றவில்லை.

இதன் விலை சற்றேறக்குறைய 7000 ரூபாய். குறிப்பிட்ட திரை அளவுகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. உங்கள் லேப்டாப் திரையை "டச்ஸ்கிரீன்" ஆக மாற்றி வேலை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால், தாராளமாக இந்த கருவியை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இருமுறை உங்கள் லேப்டாப் திரையின் அளவு மற்றும் இயங்குதளங்களுக்கு பொருத்தமானாதுதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

எனது லேப்டாப்பில் நான் பயன்படுத்திப் பார்த்தபொழுது நன்றாக வேலை செய்தது. எனக்கு கீபோர்டு , மௌஸ் பயன்படுத்தியே பழக்கப்பட்டதால் அதை எப்பொழுதாவதுதான். குழந்தைகள் கேம்ஸ் விலையாடும்பொழுது மட்டும் இணைத்தவிடுவேன்.

நீங்களும் வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு டச் ஸ்கிரீன்தான் பிடிக்கும் என்றால் தராளமாக வாங்கி பயன்படுத்தலாம். குறிப்பாக கடைகளில் பில்லிங் சாப்ட்வேர் பயன்படுத்தும் லேப்டாப்களுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும்.

தற்பொழுது வெளிவரும் புதிய டச் ஸ்கீரீன் லேப்டாப்புகளுடன் ஒப்பிடும்பொழுது, இதன் விலையும், தரமும் நன்றாகவே இருக்கிறது. விலையும் பாதியாக உள்ளதால் உங்கள் பட்ஜெட்டிற்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.

என்ன இது? கருவியை பற்றி சொல்லிவிட்டு, அது எங்கு கிடைக்கும்? எப்படி வாங்குவது என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லையென நினைக்கிறீர்களா? அது பற்றிய கூடுதல் தகவல்கள் இங்கே.

நிறுவனம்: Neonode
தயாரிப்பின் பெயர்: AirBar
கிடைக்குமிடம் : Amazon, Flipkart

உங்களுக்குத் தேவையெனில் Google - ல் Neonode AirBar Touchscreen Enabler for Laptops எனத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு அந்த தயாரிப்பு கிடைக்கும் இணையத்தளங்கள் கிடைக்கும். ஆமேசானில் வாங்கினால் பாதுகாப்பாக பொருள் உங்கள் இல்லம் தேடி வரும்.

இந்த பதிவு பற்றி உங்களுடைய கருத்து என்ன? இதை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்பதை கீழே கமெண்ட் செக்சனில் தெரிவிக்கவும்.

இதுபோன்று வேறேதேனும் கருவிகள் இருப்பினும் அதையும் தெரிவியுங்கள். கூடுதல் விபரங்கள் தேவைபடினும் இங்கு கேட்கலாம்.  இப்பதிவு உங்களுக்கு/உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கருதினால் மறக்காமல் SHARE செய்யுங்கள். 

Post a Comment

0 Comments